பாவேந்தர் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தென்றலும் இருக்கும்; தீயின் சூடும் இருக்கும்; புரட்சிச் சியதனையும் இருக்கும். இதனாலேயே அவர் ‘பாவேந்தர்’ என்றும், ‘புரட்சிக் கவிஞர்’ என்றும் மக்களால் போற்றப்பட்டார்.தமது 18ஆவது வயதில் அரசினர் பள்ளியில் தமிழாசிரியராய் அமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட பேரன்பால் தம் பெயரைப் ‘பாரதிதாசன்’ என வைத்துக் கொண்டார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தமிழச்சியின் கத்தி, இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.