தமிழ் நாட்டின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவன் என்றும் இளையனாகவும், அழகனாகவும், கடவுள் தன்மையோடும் மணம் வீசுகின்றான். அவனைப்பற்றி பாராயணம் பண்ணுவதற்குப் பல நூல்கள் உள. அவற்றுள் ஒன்று ‘கந்தர் சஷ்டிக் கவசம்’. கவசம் மிகவும் எளிய நடையில் அமைந்தது. பாமரர்களும் எளிதில் பாராயணம் செய்யும் இயல்பின. எஃகுக் கவசம் வீரர்களின் உடலைக் காப்பது, சஷ்டிக் கவசம் அடியார்களின் உயிரைக் காப்பது.