என் முதல் புத்தகம் எனும் இந்நூல் அனைவரும் தமிழ்மொழியை எளிய முறையில் கற்றுக் கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது. உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, கிரந்து எழுத்து என அனைத்து எழுத்துகளையும் சொற்களையும் சுலபமாக உச்சரிப்பதற்கு மலாய் மொழியில் தமிழ் எழுத்துகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அசைவழி கற்றல் உத்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், எளிய முறையில் வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ள கைகொடுக்கும். மேலும், கண்கவர் வண்ணப் படங்களும் இணைக்கப்பட்டு அனைவரிடத்திலும் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டி வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள இந்நூல் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம்.